அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் அக்ரோன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன், 26 பேர் படுகாயமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது நேற்று முன்தினம்(01.06.2024) நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
மேலும் 26 பேர் காயமடைந்ததாகவும், அதிகமானவர்கள் பிரதேச வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.