கொழும்பு – மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வணிக நிறுவனமொன்றில் இருந்த இளைஞர் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
https://www.youtube.com/embed/DCKJHSG7258

