வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில்
ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற சட்ட
விரோத படகு, வலைகள், கூட்டு வலைகளை பயன்படுத்தி தொடர்ச்சியான முறையில்
ஈடுபட்டதை தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 நாட்கள் விளக்கமறியல்
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை பிணையில் விடுவித்துள்ளதுடன் ஏனைய
நால்வரும் நீதிமன்றில் முற்படுத்தி 14 நாட்கள் விளக்கமறியல்
வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்வள திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய கடற்தொழில் ஒத்துழைப்பு இயக்கமும், வட்டுவாகல் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினரும்,
செல்வபுரம் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து
சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும்
குறிப்பிடத்தக்கது.