புதிய இணைப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (02) சமனில் முடிவடைந்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதலில் சிறிது தடுமாற்றதுடன் விளையாடிய இலங்கை அணி துனித் வெல்லாலகேயின் அதிரடி ஆட்டத்தினால் சரிவிலிருந்து மீண்டது.
இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 67 ஓட்டங்களும், பெதும் நிஸ்ஸங்கா 56 ஓட்டங்களும் பெற்றனர்.
இதன்படி இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 231 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்திய இலங்கை அணிக்களுக்கெதிரான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை செய்ய தீர்தானித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை(Srilanka) மற்றும் இந்திய(India) அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரானது, இன்று(2) பிற்பகல் 2.30க்கு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா (Rohit sharma)தற்போது இந்திய ஒருநாள் அணியை வழிநடத்தவுள்ளார்.
ஒருநாள் போட்டி
சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.
விராட் கோலி(Virat Kholi), கே.எல். ராகுல்(K.L.Rahul), மற்றும் ஸ்ரேயஸ் ஐயர்(shreyas iyer) ஆகியோரும் ஒரு நாள் அணியில் இணைந்துள்ளனர்.
மேலும்,கௌதம் கம்பீர்(Gautam Gambhir) தலைமைப் பயிற்றுவிப்பாளராக இணைந்த பிறகு இந்திய அணி பங்குகொள்ளும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
இந்திய அணி
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் இந்திய அணி இதுவரையில் 99 போட்டிகளிலும் இலங்கை 57 போட்டிகளிலும் வென்றுள்ளன.
இதேவேளை, சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி இருபதுக்கு 20 தொடரில் இலங்கையை 3-0 என வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.