இந்திய (india) அணியுடனான ஒருநாள் மற்றும் ரி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி (srilankan team) அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலா மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
இலங்கை குழாம்
இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம் வருமாறு, சரித் அசலங்க (அணித்தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெந்திஸ், குசல் ஜனித் பெரேரா
கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன
நுவன் துஷார.

மற்றும், துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, சமிந்து விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் (Harin Fernando) அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்டோர்
முதலில் மூன்று ரி20 கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 27, 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் இரவு 07:00 மணிக்கு கண்டி பல்லேகல (Pallekele International Cricket Stadium) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, 50 வயதுக்கு மேற்பட்டோர் கொண்ட ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய மூன்று தினங்களில் மதியம் 02.30 மணிக்கு கொழும்பு (colombo) கேட்டராம சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதேபோல், எதிர்வரும் 2, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர்
இருபதுக்கு 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் இந்திய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு நாள் தொடரின் தலைமையை ரோஹித் சர்மா தொடர்வார்.
இந்திய அணியின் புதிய துணை பயிற்றுவிப்பாளராக அபிஷேக் நாயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சரியான சமநிலை கொண்ட அணியைத் தேர்வுசெய்ய முயலும்போது சிலருக்கு இடம் கிடைக்காமல் போகலாம் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் (Ajit Agarkar) தெரிவித்துள்ளார்.
ருதுராஜ் (Ruturaj Gaikwad), அபிஷேக் சர்மா (Abishek Sharma), இருவரையும் இலங்கைக்கெதிரான இருவகைப் கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் காப்பாளர் சஞ்சு (Sanju Samson) சாம்சனை ஒருநாள் போட்டித் தொடருக்கும் தேர்வுசெய்யாதது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

