சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரானது ஹராரேவில் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகியது.
குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இலங்கை அணி
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
குறித்த போட்டியில், இலங்கை அணி சார்பில் பெத்தும் நிசங்க அதிகபடியான ஓட்டங்களாக 76 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தார்.
மேலும், கமிந்து மென்டிஸ் 50 ஓட்டங்களையும், ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுகொடுத்தனர்.
இதன்படி, 299 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.