மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana) புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா (India)-தென் ஆபிரிக்கா (South Africa) மகளிர் அணிகளுக்கு இடையில் நேற்று (16) பெங்களூரில் (Bangalore) நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்தவகையில், போட்டியில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி 27.1ஆவது ஓவரில் 59 ஆவது ஓட்டத்தை எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 7000 ஓட்டத்தை கடந்து சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்திய வீராங்கனைகள்
இந்த நிலையில், ஒருநாள் ஆட்டங்களில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஸ்மிரிதி பிடித்துள்ளார். முதல் 2 இடங்களில் மிதாலி ராஜ் (Mithali Raj) ஹர்மன்பிரீத் (Harmanpreet Kaur) ஆகியோர் உள்ளனர்.
மேலும், இந்த போட்டியில் இந்திய அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.