முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெண் பிள்ளைகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள பெற்றோர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமகாலத்தில் தொழில்நுட்பத்தின் ஆபத்தினை கவனத்தில் கொள்ளாத பெண்கள் மற்றும் பெற்றோரின் செயற்பாடு காரணமாக பலரின் வாழ்க்கை பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்து பெற்றோர் அல்லது உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் இடும் பதிவுகள் அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

தொழிநுட்பம் நவீனமயமடைந்து வருகின்ற நிலையில் ஆண்களை விடப் பெண்கள் இணைய தள யுகத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

AI காணொளி

தகவல் தொழில் நுட்பம் தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றதால் பல்வேறு நன்மைகள் உட்பட தீமைகளும் இடம்பெறுகின்றன.

உதாரணமாக சொல்லப்போனால் AI தகவல் தொழில் நுட்பத்தால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சமூக சீர்கேடுகள் தலை  தூக்கி நிற்கின்றன.

பெண் பிள்ளைகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள பெற்றோர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Social Networks Safe For Women Al Technology

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்ந நிலையில், உடல் ரீதியான விமர்சனங்கள், தவறாகச் சித்தரித்தல் போன்றவைகளால் சமூக வலைத்தளங்களில்  பெண்கள் பாதிப்படைகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்

பெண்களுக்கு எதிராக இப்படியோர் உலகம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றமையே  பல்வேறு குற்றங்களுக்கு வழிவகுப்பதாக அமைகின்றன.ஆனால் இது தற்காலத்தில் ஒரு சாதாரண விடயமாக காணப்படுகின்றது.

பெண் பிள்ளைகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள பெற்றோர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Social Networks Safe For Women Al Technology

தற்போது, வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பல்வேறு பெண் பிள்ளைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இது சிலருக்கு பெருமையான விடயமாக  இருந்தாலும் பலர் இதனை தீய எண்ணத்துடன் உற்று நோக்கும் சூழலும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

முடிந்தவரை பெண்பிள்ளைகளுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நிறுத்திக் கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகும்.

பெற்றோர் அவதானம்

அண்மைக்காலங்களில் தொழில்நுட்ப உதவியால் உருமாற்றம் செய்யப்பட்டு, பெண்களை தவறான கோணங்களில் சித்தரிக்கும் கொடூரமான மனநோய் மனிதர்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது. 

இவ்வாறு புகைப்படங்களை பகிருவதால் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமன்றி அவர்களின் குடும்ப சூழலும் பாதிக்கப்படும்.

பெண் பிள்ளைகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள பெற்றோர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Social Networks Safe For Women Al Technology

சாதரணமாக ஒரு பெண்பிள்ளை சமூக வலைத்தளத்தில் வலம்வந்தாலே அதனை தவறாக சித்தரிக்கும் காலம் தான் இப்போது.

இதனை கருத்திற் கொள்ளாது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிரும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் உயிரை மாய்த்த சம்பவங்கள் இலங்கையிலும் பதிவாகி உள்ளன. 

எனவே, இந்தவிடயம் தொடர்பில் பெற்றோர், பெண்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Laksi அவரால் எழுதப்பட்டு,
29 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–

இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.