இந்தியாவில் உயிரிழந்த தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு மீண்டும் லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் உயிரிழந்தமை அந்த குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி, லண்டன் நகருக்கு அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட மூன்று நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்தனர்.
விமானம் விபத்து
இவ்வாறு இடம்பெற்ற விபத்திலேயே லண்டனில் வசித்துவரும் டேனியல் கிறிஸ்டியன் லோரன்ஸ் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து லோரன்ஸின் அம்மா ரவீனா டேனியல் கிறிஸ்டியன் கண்கலங்கியபடி கூறுகையில், “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லோரன்ஸ் அவனது மனைவியுடன் வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வந்தான்.
உயிரோடு பார்ப்பது அப்போதுதான் கடைசி என்பது தெரியாது
எனது கணவர் 15 நாட்களுக்கு முன்பு இறந்ததையடுத்து லண்டனில் இருந்து இங்கு வந்தான். திரும்ப லண்டனுக்கு புறப்படும்போது நாங்கள்தான் அவனை வழி அனுப்பி வைத்தோம். எனது மகனை உயிரோடு பார்ப்பது அப்போதுதான் கடைசி என்பது எனக்கு அப்போது தெரியாது” என்று கதறிஅழுதபடி தெரிவித்தார்.


