முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன் – விசாரணையில் அம்பலமான உண்மை

கொழும்பின் புறுநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் தனது தாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திரா வீதியைச் சேர்ந்த 67 வயது தாய் வயலட் வீரரத்ன என்ற தாயார் 7 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தகரான 49 வயது மகன், தனது தாயை மிகவும் வலி மிகுந்த முறையில் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் வாக்குவாதம்

வேலைக்கு செல்ல தயாராக இருந்து மகன், தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தாயின் கழுத்தில் தாக்கியதால், அவர் தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன் - விசாரணையில் அம்பலமான உண்மை | Son Killed Mother In Colombo Yesterday

பின்னர் சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறிய போது, தனது தாயார் அடிக்கடி மயக்கம் அடைவதால் அவரை குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு அயலவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதற்கமைய, அயலவர்கள் காலையில் வீட்டிற்குச் சென்று அவரைப் பரிசோதித்த போது, ​​அவர் தரையில் கிடப்பதைக் கண்டு, களுபோவில போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

மரணத்திற்கான காரணம்

இது குறித்து மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலையில் மகன் தனது அண்டை வீட்டாருடன் தாயை பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற போதிலும் அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்க்கவில்லை.

கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன் - விசாரணையில் அம்பலமான உண்மை | Son Killed Mother In Colombo Yesterday

அவரது தாயார் 7 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும், அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகனின் கூற்றுகளை அப்பகுதி மக்கள் நம்பிய நிலையில், பிரேத பரிசோதனையில் கழுத்து மற்றும் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்ததால், மரணத்திற்கான காரணம் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் மகனே தாயாரை கொலை செய்தமை தெரிய வந்த நிலையில் நேற்றையதினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.