போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முக்கிய பொலிஸ் அதிகாரியொருவரின் புதல்வன் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் நேற்று(11.08.2025) மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னாள் பணிப்பாளர்
அதனையடுத்து, குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த ரொட்ரிகோவின் புதல்வர் என்பது தெரிய வந்துள்ளது.

அஜந்த ரொட்ரிகோ பொலிஸ் கலகமடக்கும் பிரிவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

