அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும்
உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று(12) மாலை 3 மணிக்கு சம்மாந்துறை பொலிஸ்
நிலையத்தில் நடைபெற உள்ளது.
கலந்துரையாடல்
அத்துடன் அனைத்து
வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கும் இந்த கலந்துரையாடல் அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க வரும்போது தங்களுடைய முச்சக்கர வண்டிகளுடன்
வருகை தருமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப்
குமார தெரிவித்துள்ளார்.



