ஆசிய கிண்ணப் போட்டியில் (Asia Cup) பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லலாகேவின் தந்தை உயரிழந்துள்ளார்.
துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற குழு சுற்றுப் போட்டி முடிந்த சில நிமிடங்களில், அணியின் உடைமாற்றும் அறையில் இருந்த போது இந்த துயரச் செய்தி வெல்லலாகேவுக்கு (Dunith Wellalage) தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பெரும் வெற்றி
ஆரம்பத்தில் வீட்டில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர் அவரது தந்தை மரணமடைந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய செய்தியை அறிந்து கண்ணீர் விட்டு ஆறுதல் தெரிவித்தாகவும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் பெரும் வெற்றியை பெற்ற இலங்கை அணியினரும் கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியாக மைதானத்தை விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைதொடர்ந்து, வெல்லலாகே போட்டிக்குப் பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, அதிகாலை விமானம் மூலம் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில், துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் வழியாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.