முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரி 20 உலகக்கிண்ணம் : மதுபான விருந்தில் மூழ்கிய இலங்கை அணி வீரர்கள்..!

நடந்து முடிந்த ரி20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியுடனான (South Africa Cricket Team) போட்டிக்கு முந்தைய இரவு இலங்கை அணியின் (Sri Lanka Cricket Team) சில மேலாளர்கள் மற்றும் வீரர்கள் மதுபான விருந்தொன்றை நடத்தியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கை

அணியின் மேலாளர், 3 முன்னணி துடுப்பாட்ட வீரர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சகலதுறை வீரர் ஆகியோர் குறித்த விருந்தில் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த விருந்து அணியின் உதவி மேலாளரின் அறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான ஆட்டம்

குறித்த நாளிதழானது, “ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறுவதற்கு குறித்த வீரர்கள் எடுத்த முடிவின் விளைவு, தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுகின்றது.

ரி 20 உலகக்கிண்ணம் : மதுபான விருந்தில் மூழ்கிய இலங்கை அணி வீரர்கள்..! | Sri Lanka Cricket Team Drinks Party T20 World Cup

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அணியின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊடகங்களிடம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், அணியின் மூத்த ஆலோசகரால் இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளர் 

நடைபெற்று முடிந்த ரி20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் விளையாட்டு, ரசிகர்களால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.

ரி 20 உலகக்கிண்ணம் : மதுபான விருந்தில் மூழ்கிய இலங்கை அணி வீரர்கள்..! | Sri Lanka Cricket Team Drinks Party T20 World Cup

 இந்த ஆரோக்கியமற்ற சூழ்நிலையில், தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் (Chris Silverwood) தொடரின் மூலம் தனது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதை ஏற்கவில்லை என்று நம்பப்படுகிற நிலையில் மற்றுமொரு உப பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸின் (Naveed Nawaz) ஒப்பந்தமும் இலங்கை அணியின் சரிவின் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை அணியின் சரிவுக்கு அதன் முகாமைத்துவமும் ஒரு காரணியாக சுட்டிக்காட்டப்படுகின்றது

உரிய நடவடிக்கை

இது தொடர்பான விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே இலங்கை அணி மீது பதிந்துள்ள கரும்புள்ளியை நீக்குவதற்கு முடியும்” என தெரிவிக்கப்படுகிறது.

ரி 20 உலகக்கிண்ணம் : மதுபான விருந்தில் மூழ்கிய இலங்கை அணி வீரர்கள்..! | Sri Lanka Cricket Team Drinks Party T20 World Cup

எவ்வாறாயினும் குறித்த நாளிதழால் இலங்கை அணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.