புதிய இணைப்பு
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றியை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ரி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல், சகாரி போக்ஸ் ஆகியோர் 27 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் வெல்லலகே 3 விக்கெட்டும், துஷாரா, ஹசரங்கா, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
முதலில் களமிறங்கிய குசால் மெண்டிஸ் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து பதும் நிசங்கா 19 ஓட்டங்களும், குசால் பெராரா மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 23 ஓட்டங்களும், பானுகா ராஜபக்ச 4 ஓட்டங்களும், ஹசரங்கா 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
அணித்தலைவர் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி 35 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள எடுத்து வெற்றி பெற்றது.
அத்துடன் ரி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதலாம் இணைப்பு
இலங்கை (Srilanka) மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டி தம்புள்ளையில் (Dambulla) இன்று (9.11.202) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது T20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
ரி20 கிரிக்கெட் தொடர்
கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது.
இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.
இந்திய வீரர் சாதனை
இதேவேளை, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. போட்டியில் முதலில் ஆடிய இந்தியா (India) 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் (Sanju Samson) 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.