முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் தகரங்களை அகற்றுவதற்காக அழைக்கப்பட்டு பின்னர் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (09.08.2025) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் இராணுவத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் சகோதரர் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதேபோன்றுதான் 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட இராணுவத்தினர் விசாரணைக்கு அழைக்கிறார்கள் என நம்பிச் சென்றவர்களே செம்மணியில் இன்று மனிதப்புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்கப்படும் நிலையில் இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
ஆகவே ஆளும் தரப்பு இந்த விவகாரத்தில் கவனம் எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. வடக்கிலே அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் இருக்கின்றார். 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறாக தமிழர் பகுதியில் இராணுவத்தினரின் கொடூரங்கள் இன்று நேற்று இடம்பெறுவது அல்ல. அது காலாதிகாலமாக கட்டவீழ்க்கப்படுகிறது.
இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு…

