முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்கள் படைத்த சாதனை

தென்கொரி­யாவில்(South Korea) நடை­பெற்ற ‘ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப்’ ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்­கப்­ப­தக்கம் வென்றுள்ளார்.

இப்­போட்­டியில் மற்­றொரு இலங்கை(Sri Lanka) வீரர் சுமேத ரண­சிங்க வெண்­க­லப்­ப­தக்கம் வென்­ற­துடன், பெண்­க­ளுக்­­கான ஈட்டி எறி­தலில் நதீஷா தில்­ஹானி வெண்­க­லப்­ ப­தக்கம் வென்றுள்ளார்.

தென்கொரி­யாவின் மெக்போ நகரில் நடை­பெற்ற 2ஆவது ஆசிய எறிதல் சம்­பி­யன்­ஷிப்பில் நேற்று (15) நடை­பெற்றது.

 புதிய போட்டிச் சாதனை

ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் ருமேஷ் தரங்க பத்­தி­ரகே 85.45 மீற்றர் தூரம் எறிந்து தங்­கப்­ப­தக்கம் வென்றுள்ளார்.இதன் மூலம் புதிய இலங்கைச் சாத­னை­யையும், புதிய போட்டிச் சாதனை­யையும் ருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்கள் படைத்த சாதனை | Sri Lankan Athletes Record In Javelin Throwing

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் திய­க­மவில் நடை­பெற்ற போட்­டி­யொன்றில் சுமேத ரணசிங்க 83.04 மீற்றர் எறிந்­த­மையே இது­வரை ஈட்டி எறி­தலில் இலங்கையின் தேசிய சாத­னை­யாக இருந்­தது, அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டிக்கு நேரடி தகுதி பெறு­வ­தற்­கான அடைவு மட்டம் 85.50 மீற்­றர்­க­ளாகும். எனவே,
ஒலிம்பிக் அடைவு மட்­டத்தை 5 சென்­ரி­மீற்­ற­ரினால் ருமேஷ் தரங்க அடையத் தவறியுள்ளார்.

இலங்கையின் சாதனை

இதேவேளை,அதே­வேளை, முந்­தைய இலங்­கைச் சாத­னை­யா­ள­ரான சுமேத ரண­சிங்­கவும் நேற்று ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் பங்­கு­பற்றி வெண்­கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்கள் படைத்த சாதனை | Sri Lankan Athletes Record In Javelin Throwing

33 வய­தான சுமேத ரண­சிங்க இப்­போட்­டியில் 77.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்தார். பாகிஸ்­தானின் எம். யசீர் 78.10 மீற்றர் எறிந்து வெள்­ளிப்­பதக்கம் வென்றுள்ளார்.

இதே­வேளை, பெண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீராங்­கனை நதீஷா தில்­ஹானி லேக்­கம்கே, 57.94 மீற்றர் எறிந்து வெண்­கலப் பதக்­கத்தை வென்றுள்ளார்.

மற்­றொரு இலங்கை வீராங்­கனை டயனா ஹர்­சனி 48.46 மீற்றர் எறிந்து 7ஆவது இடத்தைப் வென்றுள்ளார்.

இப்­போட்­டியில் ஜப்­பா­னிய வீராங்­கனை மோமனி உவேதா 61.32 மீற்றர் எறிந்து தங்கப் பதக்கத்தையும் சீனாவின் சூ லிங்டான் 60.06 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.