மலேசியாவில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களான ‘கெஹெல்பத்தர பத்மே’என
அழைக்கப்படும் மனுதினு பத்மசிறி பெரேரா மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ உள்ளிட்ட பல
இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு
இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.
போலி கடவுச்சீட்டுகளுடன் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சந்தேக
நபர்கள் கோலாலம்பூரில் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜதந்திர வழிகள்
தெற்காசிய ஆட்கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலை இலக்காகக் கொண்ட ஒரு
ரகசிய மலேசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் இடம்பெற்றதாக
தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களம், இராஜதந்திர வழிகள் மூலம் முறையாக
விபரங்களைக் கோரியுள்ளதுடன் மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தைகளை
நடத்திவருவதாக அறியமுடிகிறது.

