இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார்.
இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார்.
அகதிகள் முகாம்
இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,”1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள்.
நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன்.
சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள்.
பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.