முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுகேகொடை பேரணி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் சவாலாக அமையாது என நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக இன்று (21) கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அமைச்சர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்தநிலையில், அமைச்சர் தனது விஜயத்தின் போது நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.

சேவைத் தடங்கல்கள்,

சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சினைகள் மற்றும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், “நுகேகொட பேரணி மக்களால் நிராகரிக்கப்பட்ட சில குழுக்களால் நடத்தப்படுகின்றது.

நுகேகொடை பேரணி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Susil Ranasinghe About Nugegoda Rally

அவர்கள் ஏற்கனவே மக்களின் அவமதிப்பையும் நிராகரிப்பையும் சந்தித்துள்ளனர்.

அதனால்தான் நுகேகொட பகுதிக்குச் செல்லும் வீதிகளில் பல இடங்களில் மக்கள் புல்லை தொங்கவிட்டுள்ளனர், இது அரசாங்கம் மூலம் செய்யப்பட்டதாகக் கூற முடியாது.

அந்தக் குழுக்களுக்கு மிகச் சிறிய அளவிலான ஆதரவு வட்டம் மட்டுமே உள்ளது, அவர்களில் சிலர் பங்கேற்றாலும் இந்தப் பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்