ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்றுமுன்தினம்(03) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிதாரி கைது
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு 12 டி-56 ரவைகளை குறித்த 36 வயதுடைய சந்தேகநபர் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இந்நிலையில், கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி இன்று(05.03.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.