யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர்
தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி இடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு
சம்பவம் தொடர்பில் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகவீனமடைந்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
பணி இடைநீக்கம்
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மல்லாகம் நீதவான்
நீதிமன்றுக்கு அறிவித்து , நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் உள்ளக விசாரணைகளை அடுத்து ,
சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில் , அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

