மஹியங்கனையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தேகெட்டிய பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (நவம்பர் 2) இரவு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நவரத்ன முதியன்சேலாகே அஜந்த புஷ்பகுமார என்ற நபர் மீகஹகியுல பிரதேசத்தை சேர்ந்தவராவர் எனவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

