முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் டீசலை திருடிய சந்தேகநபர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் தாங்கியில் டீசலை திருடி விற்பனை செய்த
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்கேநபர்களை எதிர்வரும் 3 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில்; எரிபொருள் பவுஸரில்
சாரதியாகவும் அதன் உதவியாளராக கடமையாற்றிவரும் இருவரும் சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (27) அம்பாறை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு
எரிபொருளை எடுத்து சென்றுள்ளனர்.

விளக்கமறியல்

இந்தநிலையில், பெற்றோலை அங்குள்ள நிலத்திலுள்ள
ராங்கியில் நிரப்பிவிட்டு டீசல் ராங்கியில் சிறியளவு டீசலை வழங்கிவிட்டு முழு
டீசலும் எரிபொருள் தாங்கியில் இருந்து பறித்துவிட்டதாக தெரிவித்து 3300 லீற்றர் டீசலை
மோசடி செய்துகொண்டு அதனை அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பில் டீசலை திருடிய சந்தேகநபர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Suspects Who Stole Diesel In Batti Court Orders

இதனை தொடர்ந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கு
பொருத்தப்பட்டள்ள சிசிரி கமராவில் டீசலை அங்கு பறிக்காது கொண்டு செல்வதை கண்டு
உடனடியாக மட்டக்களப்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு
அறிவித்துள்ளனர்.

 குறித்த எரிபொருள் தாங்கி எங்கிருக்கின்றது என ஜி.பி.எஸ் மூலம்
சோதனையிட்டபோது கல்லடி பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து,  எரிபொருள் தாங்கியின் சாரதி மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் டீசலுடன் கலன்களை மீட்டனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.