இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் ஆழ்கடலில் பலநாள் கடற்றொழில் படகு ஒன்று, போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு நடவடிக்கை
போதைப்பொருள் பொதியை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் படகுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் ஆழ்கடலில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போதே இந்த கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய குறித்த கடற்றொழில் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

