முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.திருநெல்வேலியில் வாள்வெட்டு – ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக
கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றையதினம்(30.11.2025)காலை
வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்
முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்
கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

யாழ்.திருநெல்வேலியில் வாள்வெட்டு - ஒருவர் பலி | Sword Attack In Jaffna One Person Killed

அதன் பிரகாரம் இன்றையதினம் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட
பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு
நோக்கி பயணித்த வேளை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர்
தூரத்தில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார்
சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார்
சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி

மேலும், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள்
வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில்
சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி
வெட்டியுள்ளனர்.

யாழ்.திருநெல்வேலியில் வாள்வெட்டு - ஒருவர் பலி | Sword Attack In Jaffna One Person Killed

ஓடி சென்றவர் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது, துரத்தி வந்த
நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில், இளைஞனின் கால் ஒன்று
கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து
தப்பி சென்றுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு
வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைததுள்ள நிலையில், வைத்தியசாலையில்
இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.திருநெல்வேலியில் வாள்வெட்டு - ஒருவர் பலி | Sword Attack In Jaffna One Person Killed

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்