பிரதமராக நரேந்திர மோடியின் (Narendra Modi) பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழக பெண் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வு, டெல்லி (Delhi) குடியரசு தலைவர் மாளிகையில் நாளை (09) இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனிடையே இந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த தொடருந்து சாரதிப் பெண்ணான ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா
இந்நிலையில் பிரதமர் மோடி, தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பதவிப்பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், தூய்மை பணியாளர்கள், கலைஞர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மகாராஸ்டிராவைச் சேர்ந்த, இந்தியாவின் முதல் தொடருந்து சாரதிப் பெண்ணான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |