இந்தியாவின் (India) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை (Ajith Doval) இலங்கை (Sri Lanka) தமிழ் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது கொழும்பில் (Colombo) இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தமிழ் பிரதிநிதிகள்
இந்தநிலையில், அஜித் தோவலை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Marudapandi Rameswaran), கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் (Aravinda Kumar) மற்றும் தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) ஆகியோர் மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான உறவை வழுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.