கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கையின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவரை, சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 59 வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்
240 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோகிராம் 855 கிராம் கொக்கையின் பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இவை அட்டைப் பெட்டியில் ஒட்டப்பட்டு, கறுப்பு காகிதத்தால் மூடப்பட்டு அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண பொதி
சந்தேக நபர் பிரேசிலில் இருந்து கட்டார் சென்று, இன்று அதிகாலை 2.40 மணிக்கு டோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியை, பயணியுடன் சேர்த்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.