இந்தியாவில் அண்மைக்காலமாக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.
அதுவும் நடுவானில் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் பயணிகளின் கதி பயங்கரமாக மாறிவிடும்.
அந்த வகையில் மகாரஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்டதொழில்நுடப கோளாறு காரணமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்ட தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
நேற்று காலையில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஃப்ளாப் ட்ரான்சிட் லைட்’ (flap transit light) கோளாறை விமான குழு கண்டறிந்த நிலையில் மீண்டும் புனே விமான நிலையத்துக்கே விமானம் திரும்பியது.

இருப்பினும் அவசர நிலை ஏதும் இல்லை என நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

