எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ளதாக தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
படைப்புச் சுதந்திரம்
ஈழத்தின் மூத்த எழுத்தாளரின் புத்தக வெளியீட்டை நடாத்தியமைக்காக கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தீவிர விசாரணைக்கு தாம் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கலை இலக்கியவாதிகள் மீது மேற்கொள்ளும் இத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத் தீவில் படைப்புச் சுதந்திரம் எதிர்கொண்டுள்ள அவலநிலையைத்தான் காட்டி நிற்பதாகவும் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.