ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, 2025-ம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் ஒரு அரிய வானியல் நிகழ்வு நிகழ இருக்கிறது.
பொதுவாக கிரகணம் என்பது இயற்கையாக நிகழும் வானியல் நிகழ்வு தான் என்றாலும் இது மனிதர்களின் வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
பொதுவாக சூரியன் அல்லது சந்திரனின் நிழல் பூமியின் மீது படும் போது ஏற்படும் நிகழ்வை கிரகணம் என்கிறோம்.
2025ம் ஆண்டின் கிரகண நாட்கள்
வருடத்திற்கு 4 அல்லது 5 கிரகணங்கள் ஏற்படும். முழு கிரகணம், பகுதி கிரகணம் என இரண்டு வகையாக கிரகணங்கள் சொல்லப்படுகின்றன.
2025ம் ஆண்டில் எத்தனை கிரகண நாட்கள், எந்ததெந்த மாதங்களில் வருகிறது, முதல் கிரகணம் எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிரகண நேரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த நேரத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
கிரகண நேரம்
இது தெய்வங்கள் தங்களின் சக்தியை புதுப்பித்துக் கொள்வதற்கான நேரம் என்பதால் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுக்களை மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் கோவில்கள் மூடப்படுவதாக சொல்லப்படுகிறது.
இவ்வளவு சக்தி வாய்ந்த கிரகண நேரம் 2025ம் ஆண்டில் நான்கு முறை நிகழ உள்ளது. 2025ம் ஆண்டில் மொத்தமாக 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என நான்கு கிரகங்கள் நிகழ உள்ளது.
இவற்றில் சந்திர கிரகணங்கள் மட்டுமே முழுமையானதாக நிகழ உள்ளது. சூரிய கிரகணங்கள் இரண்டுமே பகுதி நேர கிரகணங்களாக தான் நிகழ உள்ளன.
இந்த நான்கில் ஒரே ஒரு கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் காண முடியும். மற்ற மூன்று கிரகணங்களையும் காண முடியாது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சந்திர கிரகணம்
2025ம் ஆண்டின் முதல் கிரகணமாக நிகழ உள்ளது சந்திர கிரகணம். அதன்படி முதல் கிரகணம் மார்ச் 14 ம் திகதி நிகழ உள்ளது.
முழு சந்திர கிரகணமாக உருவாக உள்ள இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலை 10.39 மணிக்கு துவங்கி, பகல் 02.18 வரை நீடிக்க உள்ளது.
இந்தியாவில் பகல் நேரத்தில் நிகழ்வதால் இந்த கிரகணத்தை நம்மால் காண முடியாது.அதே சமயம் வட அமெரிக்காவில் இந்த கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது சந்திர கிரகணமும் முழு நேர கிரகணமாக நிகழ உள்ளதுடன் இது செப்டம்பர் மாதம் 07 ம் திகதி இரவு 09.56 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 08ம் திகதி அதிகாலை 01.26 மணி வரை நிகழ் உள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியா உள்ளிடட்ட ஆசிய நாடுகள் அனைத்திலும் காண முடியும்.
சூரிய கிரகணம்
இதேவேளை, 2025ம் ஆண்டில் மார்ச் 29ம் திகதி முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர சூரிய கிரகணமாக நிகழ உள்ள இந்த கிரகணம், பகல் 02.20 மணிக்கு துவங்கி, மாலை 06.13 வரை நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. வட அமெரிக்காவில் மட்டுமே காண முடியும்.
அதேநேரம் 2வது சூரிய கிரகணமும் பகுதி நேரமாக உருவாக உள்ளது. செப்டம்பர் 21ம் திகதி இரவு 10.59 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் திகதி அதிகாலை 03.23 மணி வரை நிகழ உள்ளது.
இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது அதே சமயம் நியூசிலாந்தில் (New Zealand) மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை காண முடியும்.