அபுதாபியில் இருந்து வந்த விமானத்தின் விமானியின் பயணப்பொதிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருடிச்சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இ்வ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான பெண் எனவும், இவர் அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இன்று (29) காலை 08.38 மணியளவில் அபுதாபியில் இருந்து இலங்கை வந்த EY-392 Etihad Airlines விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பெண் கைது
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உடன் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமானி மற்றும் விமான ஊழியர்கள் விமானத்தை விட்டு வெளியேறி தங்களது பொருட்களை சேகரித்து விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானபோது, விமானி தனது பயணப்பொதி காணாமல்போனதைக் கண்டுபிடித்துள்ளார்.
கொலம்பியாவைச் சேர்ந்த விமானியின் பயணப்பொதிகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பெண், ஒருவர் விமானியின் பயணப்பொதியை தனது பொதிகளுடன் மறைத்து வைத்து எடுத்துச்சொன்றுள்ளமை பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, வத்தளை ஹுனுப்பிட்டியவில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச்சென்று பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண் மற்றும் திருடப்பட்ட பயணப் பொதிகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.