முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானுஓயாவில் வீடுடைத்து நகை,பணத்தைத் திருடியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் நேற்றையதினம் (24) குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

திருட்டுச் சம்பவம்

வீட்டில் உள்ளவர்கள் கடந்த (16) திகதி வெள்ளிக்கிழமை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடுடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா குற்றத்தடுப்பு பிரிவில் (23) திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது.

நானுஓயாவில் வீடுடைத்து நகை,பணத்தைத் திருடியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Person Who Stole Jewelry And Money Has Arrest

அதுதொடர்பில் நானுஓயா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி முதன்மை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நானுஒயா சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரிடமிருந்து நகைகள்,பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பன கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரி மாற்ற அட்டையைக் கொண்டு 50 ஆயிரம் ரூபாவை எடுத்து பொருட்கள் கொள்வனவு செய்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

நானுஓயாவில் வீடுடைத்து நகை,பணத்தைத் திருடியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Person Who Stole Jewelry And Money Has Arrest

சந்தேக நபர் கைது செய்து நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேற்கொண்ட மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்