தேசிய மக்கள் சக்தியின் அலைக்கு முன்னால் தமிழ்த் தேசிய கட்சிகளால் ஈடுகொடுக்கமுடியவில்லை என்பதை நடந்து முடிந்த பொது தேர்தல் முடிவுகள் எடுத்துரைத்திருந்தது.
வடக்கு- கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் 8 ஆசனங்களை பெற்று தாமே தேசியத்தின் அடையாளம் என மார்தட்டி கொண்டாலும், அநுர தரப்பினரது அடையாளம் தற்போது அங்கு பதிவாகியுள்ளது.
இது தமிழ் தேசிய கட்சிகளுக்கான தோல்வியாக மாத்திரம் கருத முடியாது. மாறாக தமிழ் தேசியத்தை நம்பி கிடக்கும் புலம்பெயர் சமூகத்திற்கும் ஒரு ஏமாற்றமாகும்.
இந்நிலையில் தமிழ் சமூகம் என்றும் இல்லாத அளவு, நடந்து முடிந்த பொதுதேர்தலில் தென்னிலங்கை கட்சியின் பக்கம் தனது கண்ணோட்டத்தை திருப்ப காரணம் என்ன?
அநுர அரசின் மீது அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கான நோக்கம் என்ன?
இவ்வாறான கேள்விகளுக்கு பதில் திரட்டும் பொருட்டு ஐபிசி தமிழ் ஊடகம் தொகுத்த மக்கள் ஆதங்கங்களின் ஒளியவனம் இதோ…