முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த வலயம்

வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா
வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களில் இருந்தும் பரீட்சைக்கு முதல் தடவை தோற்றி
சித்தி பெற்றவர்களின் வீதத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண கல்வி
திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பகுபாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம்
வெளியாகியுள்ளது.

அதன்படி, வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் வவுனியா வடக்கு வலயத்தில்
இருந்து முதல் தடவையாக 253 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 189 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

ஏனைய வலயங்கள்

அந்தவகையில், 74.7 சதவீதமானவர்கள் சித்தி பெற்று
வடக்கில் முதலாவது இடத்தை பிடித்துள்ளனர்.

உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த வலயம் | The Zone That Ranked First In The North

அத்துடன், 73.5 சதவீத சித்தியைப் பெற்று தென்மராட்சி வலயம் இரண்டாம்
இடத்தையும், 70.5 சதவீத சித்தியைப் பெற்று மன்னார் வலயம் மூன்றாம் இடத்தையும்,
70.1 சதவீத சித்தியைப் பெற்று யாழ்ப்பாண வலயம் நான்காம் இடத்தையும், 69.8
சதவீத சித்தியைப் பெற்று மடு வலயம் ஐந்தாம் இடத்தையும், 69.4 சதவீத சித்தியைப்
பெற்று தீவக வலயம் ஆறாம் இடத்தையும், 68.1 சதவீத சித்தியைப் பெற்று வலிகாமம்
வலயம் ஏழாம் இடத்தையும், 67.8 வீத சித்தியைப் பெற்று வவுனியா தெற்கு வலயம்
எட்டாம் இடத்தையும், 65.2 சதவீத சித்தியைப் பெற்று வடமராட்சி வலயம் ஒன்பதாம்
இடத்தையும், 62.3 சதவீத சித்தியைப் பெற்று துணுக்காய் கல்வி வலயம் பத்தாம்
இடத்தையும், 60.6 சதவீத சித்தியைப் பெற்று கிளிநொச்சி தெற்கு வலயம் பதினொராவது
இடத்தையும், 55.4 சதவீத சித்தியைப் பெற்று கடைசி இடத்தை கிளிநொச்சி வடக்கு
வலயமும் பெற்றுக் கொண்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.