யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில்
நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடபப்டடுளள்ன.
குறித்த கொள்ளை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29
ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

