உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களை யூடியூப் மூலம் ஏமாற்றி, மந்தீரிகம் செய்வதாக பெருந்தொகை பணத்தை பெற்ற தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தைச் சேர்ந்த ஒரு தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை, முவன்பெலேஸ்ஸ பகுதியைச் சேர்ந்த சனத் என்பவர் செய்த முறைப்பாடுகளுக்கமைய தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய தேரர்
இதன்போது, பொலிஸாரின் முன்னிலையில் முறைப்பாட்டாளரை தேரர் தாக்கியுள்ளார். இதனால் முறைப்பாட்டாளர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மனம்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, குடிபோதையில் முறைப்பாட்டாளரை தாக்கிய தேரர் கைது செய்யப்பட்டு, பொலநறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண மோசடி
இந்த தேரர் நீண்ட காலமாக தனது யூடியூப் சேனல் மூலம் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
தனி நபர்களின் பாதுகாப்பு, வீடுகளைப் பாதுகாத்தல் மற்றும் நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை அளித்து வந்துள்ளார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஏராளமான பணத்தை மாற்றியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் இந்த தேரர் தனது யூடியூப் சேனல் மூலம் நீண்ட காலமாக அவர்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

