ஹட்டன்-திம்புலபதன பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததிலே இவ்வாறு மூவர் காயமடைந்துள்ளனர்.
பலத்த சேதம்
முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சாரதி மற்றும் அருகிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

