முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் டிக்டொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிக்டொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு
மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை திருடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை
சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் டிக்டொக் சமூக வலைத்தளங்களில் தனது
காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.

குறித்த இளைஞனுடன் டிக் டொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த
யுவதி, அவரை காதலித்து வந்துள்ளார்.

டிக் டொக் காதல் 

அந்நிலையில் தனது காதலனுக்கு, அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு
செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில்
இருந்து சுமார் 19 பவுண் நகையை திருடி, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.

யாழில் டிக்டொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி கைது | Tiktok Celebrity Jaffna Woman Theft Jwells

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது
சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை
தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

7 பேர் 

யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழில் டிக்டொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி கைது | Tiktok Celebrity Jaffna Woman Theft Jwells

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன், யுவதி
வீட்டில் நகைகளை
திருடியமைக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க
உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்