முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

Nomad Capitalist தரவரிசையில் இலங்கை (Srilanka) கடவுச்சீட்டு 43.5 மதிப்பெண்களுடன் 168 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

அத்துடன் இலங்கை கடவுச்சீட்டு தெற்காசியாவில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை (United Arab Emirates) தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுகளின் வலிமை

அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கடவுச்சீட்டுகளின் வலிமையை அறிவிக்க Nomad Capitalist 5 விடயங்களை கருத்திற் கொள்கிறது.

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம் | Top 10 Most Powerful Passport In The World 2025

அந்தவகையில், 199 நாடுகள் பட்டியலில் இலங்கை 171ஆவது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 168 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  

இலங்கை கடவுச்சீட்டு 57 நாடுகளுக்கு பயணிக்க அனுமதிப்பதே இந்த முன்னேற்றத்திற்கான காரணமாகும்.

உலகிலேயே மிகவும் வரவேற்கத்தக்க கடவுச்சீட்டு

இந்த ஆண்டு உலகிலேயே மிகவும் வரவேற்கத்தக்க கடவுச்சீட்டை கொண்ட நாடு அயர்லாந்து ஆகும். தற்போதைய அயர்லாந்து கடவுச்சீட்டின் ஊடாக விசா இன்றி அல்லது on arrival visa உடன் 176 நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கிறது.

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம் | Top 10 Most Powerful Passport In The World 2025

சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த இரண்டு நாடுகளின் மக்களும் உலகெங்கிலும் உள்ள 175 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது on arrival visa உடன் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி இந்தியா 148ஆவது இடத்தில் உள்ளது, மேலும் இந்தியர்கள் விசா இல்லாமல் அல்லது வருகை விசாவில் 75 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

இருப்பினும், பூட்டான் இலங்கை மற்றும் இந்தியாவை பின்தள்ளி 140ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்