தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிக மதிப்பெண்
இதன்படி, புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தைப் பிடித்த மாணவர் 188 மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், 17 மாணவர்கள் 187 முதல் 186 வரையான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர மேலும் சுட்டிக்காட்டினார்.