நடப்பு ஏப்ரல் மாதத்தில் இலங்கை(sri lanka) ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன்படி ஏப்ரல் 2025 இன் முதல் 15 நாட்களில் 93,915 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதன்படி இந்தியா(india) 18,220 (19.4%) முதலிடத்திலும், இங்கிலாந்து (england)11,425 (12.2%) இரண்டாமிடத்திலும் ரஷ்ய கூட்டமைப்பு(russia) 8,705 (9.3%) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இலங்கை இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 816,191 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 38% அதிகரிப்பு ஆகும்.
ஜேர்மனியிலிருந்து 7,746, அவுஸ்திரேலியாவிலிருந்து 6,604, பிரான்சிலிருந்து 4,658, சீனாவிலிருந்து 3,492, பங்களாதேஷிலிருந்து 3,251, அமெரிக்காவிலிருந்து 2,150, சுவிட்சர்லாந்திலிருந்து 1,823 மற்றும் பிற நாடுகளிலிருந்து 25,841 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.