களுத்துறையில் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி ஒருவர் நேற்று(16.04.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை பகிர்ந்து கொள்வதில் வழிகாட்டிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடா வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய சுற்றுலா வழிகாட்டியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதுகுறித்து அவர் பொலிஸாரிடம் விளக்கம் அளிக்கையில், தான் வழிகாட்டிய சுற்றுலாப் பயணி ஒருவரை சந்தேகநபரான மற்றுமொரு வழிகாட்டி கவர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தன்னை கத்தியால் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.