Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமம் ஒன்றின் பெண் வர்த்தக பகுப்பாய்வாளர் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குழுமத்தின் தலைவருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸார் பயணத்தடையை பெற்றுள்ளனர்.
கொழும்பில் (Colombo) வசிக்கும் 39 வயதுடைய, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த தடை பெறப்பட்டுள்ளது.
பெண் முறைப்பாடு
கடந்த மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர வகுப்பு ஹோட்டலில், குழுமத்தலைவரால், தாம் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக, அந்த பெண் முறைப்பாடு செய்ததாக பொலிஸ் தரப்புகள் தெரிவித்துள்ளன.
தலைவர் வெளிநாட்டில் இருந்தபோது, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது, தாம் வணிக ஆய்வாளராக, இணையம் மூலம் பணிபுரிந்ததாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த மே 6 ஆம் திகதி, நிறுவனம் அவரைத் தொடர்பு கொண்டு, தலைவர் இலங்கை திரும்பியதாகவும், மே 7 ஆம் திகதி, தன்னை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி குறிப்பிட்ட இடத்தில் அவரைச் சந்தித்தபோதே, தலைவர் தன்னை தகாத முறைக்கு உட்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸில், குறித்த பெண் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர்கள் கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளனர் .
எனினும் சம்பவம் நடந்த அன்றே, குறித்த குழுமத் தலைவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.