முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மஸ்க்கினால் ட்ரம்ப் எடுத்த முடிவு: பறிபோன அரச ஊழியர்களின் பணிகள்

அமெரிக்க(USA) அரசு நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதை தொடர்ந்து அரசின் தேவையற்ற செலவுகளை சுட்டிக்காட்டும் வேலையை செய்யும் DODGE நிறுவனத்தை உருவாக்கினார்.

இதற்கு ட்ரம்ப்பின் ஆதரவாளரும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமை வகிக்கின்றார்.

அதனை தொடர்ந்து
பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க்(Elon MUSK) ஆலோசனையின் பேரில் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

மஸ்க்கினால் ட்ரம்ப் எடுத்த முடிவு: பறிபோன அரச ஊழியர்களின் பணிகள் | Trump Fires 10 000 Govt Employers On Musk S Advice

பணிநீக்கம்

இந்த நிலையில்தான் தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

மஸ்க்கினால் ட்ரம்ப் எடுத்த முடிவு: பறிபோன அரச ஊழியர்களின் பணிகள் | Trump Fires 10 000 Govt Employers On Musk S Advice

அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர்.

சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.

 ஊழியர்கள் போராட்டம் 

அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

மஸ்க்கினால் ட்ரம்ப் எடுத்த முடிவு: பறிபோன அரச ஊழியர்களின் பணிகள் | Trump Fires 10 000 Govt Employers On Musk S Advice

வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது.

பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை ட்ரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரச ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.