யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (1) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்
நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
சட்ட நடவடிக்கை
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை குறித்த கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது
செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள
அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.