பேருந்தில் போதைப்பொருள் கடத்தினர் எனக் கூறப்படும் சாரதி உட்பட இருவர் அம்பாறை
தலைமையகப் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அவர்களிடல் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் நீண்ட காலமாக பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்துள்ளனர்
என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

