காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (31) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் அவரைப் பார்வையிட காலி ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் இருவர் நேற்று வருகை தந்துள்ளனர்.
கைதிக்கு வழங்குவதற்காக அவர்கள் கொண்டு வந்த மாம்பழங்களைச் சோதனையிட்ட போது அதற்குள் எட்டு கிராம் போதைப் பொருள் பொலித்தீனால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.
அதனையடுத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.