யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப்பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தலா ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைதான சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நட வடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


